2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிங்கப்பூரில் மாடியிலிருந்து விழுந்து இலங்கைப் பெண் மரணம்

Freelancer   / 2023 மே 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரிந்த  இலங்கைப் பெண் ஒருவர் மாடியில் இருந்து  வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகிறது.

தான் பணியாற்றும் வீட்டில் உள்ளவர்கள்  தன்னிடம் பிரச்சினை செய்வதாகவும் தான் இலங்கை செல்ல விரும்புவதாகவும் உயிரிழந்த பெண் தனது நண்பிகளிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .