2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

சிசேரியன் மூலமாக பிறந்த ’குட்டி’ கொரில்லா

Mithuna   / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவில் (Fort Worth Zoo) கர்ப்பமாக இருந்த செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.

பிரீக்ளம்ப்சியா என்பது கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் தீவிர இரத்த அழுத்த நிலையால் செகானி என்ற கொரில்லா பாதிக்கப்பட்டிருந்தால் தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் இந்த 'குட்டி' கொரில்லா பிறந்தது.

நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர். தற்போது செகானி மற்றும் ஜமீலா ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X