Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 17 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கென்யாவில் 42 பெண்களை கொலை செய்த சீரியல் கொலைகாரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜோமைசி கலுஷா (33) என்ற அந்த நபர், 2022 முதல் தன் மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்ததை பொலிஸில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன், 9 பெண்களின் உடலை சிதைத்து அனைத்து உடல்களையும், செயல்படாத குவாரிக்குள் வீசி உள்ளது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவருக்கும் 18 முதல் 30 வயது வரை இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளியின் வீட்டில் சோதனை நடத்தியதில் மடிக்கணினி, 10 கையடக்கத் தொலைபேசிகள், அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் உடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குவாரியில் உடல்களை தேடி வரும் பொலிஸார் இதுகுறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago