2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘சிரியாவில் ஈரானியப் படையை தாக்கியது இஸ்ரேல்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு அருகே, இஸ்ரேலிலுள்ள இலக்குகள் மீது ‘கொல்லும் ட்ரோன்களை’ ஏவத் திட்டமிட்ட ஈரானியப் படைகளை இஸ்ரேலிய விமானம் நேற்று தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவுக்குள்ளிலிருந்து கடந்த சில நாட்களாக, இஸ்ரேலிலுள்ள இலக்குகளை இலக்க்கு வைக்கும் மேம்பட்ட திட்ட தயார்படுத்தலிருந்த ஈரானி புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுப் பிரிவான ஈரானிய குவாட்ஸ் படை, ஷியா ஆயுததாரிகளை தாக்குதலானது இலக்கு வைத்ததாக அறிக்கையொன்றில் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

வட இஸ்ரேலில் வெடிபொருட்களும் ‘கொல்லும் ட்ரோன்களை’ ஏவ குவாட் படை கடந்த வியாழக்கிழமை தயார்படுத்தியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஜொனதன் கொன்றிகஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திட்டமிடப்பட்ட ஈரானியத் தாக்குதலை இராணுவம் முறியடித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இதேவேளை, டமஸ்கஸ்ஸுக்கு மேலாக சிரிய வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் எதிர் இலக்குகளை நேற்று முன்தினமிரவு இடைமறித்ததாக  சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X