Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் டெய்ர் அல்-ஸோர் மாகாணத்தில், ஐக்கிய அமெரிக்காவின் எப்-15 ஜெட்கள் இரண்டு பொஸ்பரஸ் குண்டுகளை நேற்று முன்தினம்வீசியதாக ரஷ்ய இராணுவம் நேற்று தெரிவித்ததாக டி.ஏ.எஸ்.எஸ், ஆர்.ஐ.ஏ செய்தி முகவரகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை ஐக்கிய அமெரிக்கா மறுக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியாவின் இறுதிப் பிரதான பலம் வாய்ந்த இடமான ஹஜின் கிராமத்தை விமானத் தாக்குதல்கள் இலக்கு வைத்ததாகத் தெரிவித்துள்ள ரஷ்ய இராணுவம், தாக்குதல்கள் காரணமாக தீ ஏற்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்புகள் குறித்து தகவலில்லை எனக் கூறியுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க விமானங்கள் பொஸ்பரஸ் குண்டுகளை வீசியதை மறுத்துள்ள பென்டகனின் பேச்சாளரான தளபதி சீன் றொபேர்ட்ஸன், “வெள்ளைப் பொஸ்பரஸ் பயன்படுத்தப்பட்ட எந்த அறிக்கைகளையும் தற்போதைய தருணத்தில் நாங்கள் பெறவில்லை” அப்பகுதியிலுள்ள எந்தவொரு இராணுவப் பிரிவிகளும் எந்தவிதமான வெள்ளைப் பொஸ்பரஸையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
சிரியப் பிரச்சினையில், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கெதிராக வெள்ளைப் பொஸ்பரஸை பயன்படுத்தியதாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகல், அடர்த்தியான வெள்ளைப் புகை திரையை ஏற்படுத்துமென்பதுடன் தீப்பற்ற வைப்பதற்கான சாதனங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. நெருக்கமான வலயங்களில் வெள்ளைப் பொஸ்பரஸைப் பயன்படுத்தும்போதும் மக்களின் என்புகளை எரிப்பதன் மூலம் அவர்களைக் கொன்று, முடமாக்கும் என்பதால் இதைப் பயன்படுத்துவதை மனித உரிமைகள் குழுக்கள் விமர்சிக்கின்றன.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago