Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு - காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்த்ததை வழங்கும் 370ஆவது பிரிவை, இந்திய அரசாங்கம் நீக்கியதன் பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில், பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த முடிவுக்கு பின்னர், பாகிஸ்தானால் எடுக்கப்பட்டு வரும் அவரச நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று, இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது, இந்தியாவுடனான வர்த்தக உறவைத் துண்டித்துக்கொள்வதாகவும் தூதரக உறவைக் குறைத்துக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதுவர் அஜய் பிசாரியாவை டெல்லிக்கு திருப்பி அனுப்பவும், பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதுடன், இந்தியாவுக்கான பாகிஸ்தான் நாட்டு தூதரை, இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்போவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது, இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டித்துள்ள பாகிஸ்தான், தற்போது இந்தியாவுக்கான ரயில் சேவையையும் நிறுத்தியுள்ளது. அந்தவகையில், பாகிஸ்தானிலிருந்து டெல்லி இடையே ஓடும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, நேற்று (08) முதல், பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.
அத்துடன், பாகிஷ்தான் நாட்டு வான் பகுதியில், விமானங்கள் பறக்க, பாகிஸ்தான் நேர கட்டுப்பாட்டை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை, கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், அடுத்த மாதம் 5ஆம் திகதிவரை பின்பற்றப்படும் எனவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என, அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார்.
23 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago