Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவிலுள்ள ஆறு மறை மாவட்டங்களில் 301 றோமன் கத்தோலிக்க பாதிரியார்களால் 1,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், இதை மறைக்கும் நடவடிக்கைகளை தேவாலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் எடுத்ததாக நேற்று வெளியிடப்பட்ட ஜுரி அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.
சில பதிவுகள் தொலைந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வரான நிலையிலும் உண்மையாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக இருக்கலாமென ஜூரி தெரிவித்துள்ளது.
1950கள் நடுப்பகுதியிலிருந்து பத்தாண்டுகளுக்கு மேலாக, 300க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்நிலையில், இரண்டாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பென்சில்வேனியாவிலும் வத்திக்கானிலுமுள்ள சிரேஷ்ட தேவாலய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட ஒழிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பென்சில்வேனியா சட்டமா அதிபர் ஜொஷ் ஷபிரோ தெரிவித்துள்ளார்.
ஹரிஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த ஜொஷ் ஷபிரோ, அதிர்ச்சிகரமாக துஷ்பிரயோகங்களின் பதிவை தேவாலயத்தின் தலைமைத்துவம் வைத்திருந்ததாகவும் மறைத்திருந்ததாகவும் கூறியதுடன், மறைமாவட்டங்களின் இரகசியப் பதிவுகளே குறித்த விசாரணையும் முதுகெலும்பு எனத் தெரிவித்துள்ளார்.
பாதிரியார்களின் பாலியல் துஷ்பிரயோகத்தை மறைத்த அவரது பங்குக்காக, நீண்ட காலமாக பிற்ஸ்பேர்க்கின் பாதிரியாகவிருந்த, தற்போது வொஷிங்டன் மறை மாகாணத்தின் தலைவராக இருக்கும் கர்தினால் டொனால் வுரேலையே குறித்த றிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அறிக்கையொன்றை விடுத்த வுரேல், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கரிசனையில் எதிர்கால துஷ்பிரயோக நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சிரத்தையுடன் நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago