Janu / 2026 மே 12 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக மே 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் மே 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் தென் கொரியாவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையைச் சீனத் துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் வழிநடத்துகிறார். கடந்த முறை டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பின் போது எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களை மேலும் மேம்படுத்துவதே இந்த ஆலோசனையின் பிரதான நோக்கமாகும்.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புக்களை அமெரிக்கா தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், இந்த விவகாரத்தை அமெரிக்க விண்வெளிப் படை (Space Force) நேரடியாகக் கவனித்து வருவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியதாவது: "ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை யாராவது நெருங்க முயன்றால், அமெரிக்கா அவர்களைச் சுட்டுக் கொல்லும். ஈரான் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அந்நாட்டிலுள்ள ஒவ்வொரு இலக்கையும் தாக்கி அழிக்க எமக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே போதும்," என அதிரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

10 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago