Freelancer / 2022 நவம்பர் 13 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஷெங்ஷோவில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர்.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஷெங்ஷோவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளமை காரணமாகவே ஃபொக்ஸ்கானுக்கு சொந்தமான தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வேலி தாண்டி வெளியேறுவதாக சீன சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
முடக்கத்தில் இருந்து தப்பிக்க தொழிலாளர்கள் வெளியேறியுள்ளனர் என்றும் 100 கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கிறார்கள் என்றும் சீனாவில் உள்ள பிபிசியின் ஊடகவியலாளர் ஸ்டீபன் மெக்டொனல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நோய் தொற்று காரணமாக பல தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
குறித்த தொழிற்சாலையில், சுமார் 300,000 தொழிலாளர்களை வேலை செய்வதாகவும் உலகின் பாதியளவான ஐபோன்களை அது உருவாக்குகிறது எனவும் ஸ்டீபன் மெக்டொனல் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் முடக்கம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில், ஹெனான் மாகாணத்தில் இருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக வீடு திரும்புவதை சீன வீடியோ ஹோஸ்டிங் சேவையான டோயுயின்னில் உள்ள வீடியோக்கள் காட்டுகின்றன.
போக்குவரத்து இன்மையால், ஃபொக்ஸ்கான் தொழிலாளர்கள் நடந்தே வீடு திரும்புவதையும், பகலில் வயல்வெளிகளிலும், இரவில் வீதிகளிலும் தங்குவதையும் சீன சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்களும் வீடியோக்களும் காட்டுகின்றன.
நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உள்ளூர்வாசிகள் ஃபொக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு உதவ இலவச விநியோக நிலையங்களை அமைத்திருப்பதையும் படங்கள் காட்டுகின்றன.
சீனாவின் கடுமையான பூச்சிய-கொவிட் கொள்கையின் கீழ், வைரஸின் எந்தவொரு கொத்தணிகளையும் தணிக்க விரைவாக செயல்பட நகரங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஷி இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டத்தை கைவிடுவார் என்று பலர் நம்பிய போதும் சமீபத்திய 20 வது கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், இது நடக்க வாய்ப்பில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago