2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சீனாவிடமே முடிவு உள்ளது

Freelancer   / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் எனவும் அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது எனவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 மேலும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “சீனாவிடம் தான் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அவர்கள் தான் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமே தவிர நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. 

“எல்லா நாடுகளுக்கும் வரி விதித்ததைப் போலவே சீனாவுக்கும் வரி விதித்துள்ளோம். சீனா எங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள முற்படுகிறது. அதனால் அவர்களுக்கு கூடுதல் வரியை விதித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .