Freelancer / 2024 ஜூலை 21 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் உள்ள ஷான்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 19ஆம் திகதி இரவு அங்குள்ள ஷாங்க்ளூ நகரில் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது அங்குள்ள நெடுஞ்சாலை பாலத்தின் மீது ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்ததில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 31 பேர் மாயமாகினர்.
பாலம் இடிந்தபோது, அதன் மீது சென்றுகொண்டிருந்த 17 கார்கள் மற்றும் எட்டு லொரிகள் கீழே விழுந்ததில், அவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஏழு வாகனங்களை மீட்டனர்.
இந்நிலையில், மாயமான 31 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.S
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago