2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீனாவை இறுக்க தயாராகும் ஜேர்மனி

Freelancer   / 2022 நவம்பர் 10 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வான் மீதான கடுமையான நிலைப்பாடு, தொழிற்றுறை ஒற்றறிதல், சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் மற்றும் நியாயமற்ற போட்டி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய காங்கிரஸின் முடிவு ஆகியவற்றை அடுத்து சீனாவுடனான தனது உறவை ஜேர்மனி மறு மதிப்பீடு செய்துவருகிறது.

ஜேர்மனியின் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்த சீனாவை இந்த நடவடிக்கை எரிச்சலூட்டியுள்ளதுடன், பீய்ஜிங்குடனான அதன் உறவுகளை புறநிலையாக பார்க்க வேண்டும் என்று சீனா பின்னர் வலியுறுத்தியுள்ளதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் அறிக்கையிட்டுள்ளது. 

மேலும், சீனாவில் நடந்த 20ஆவது தேசிய காங்கிரஸில், கட்சியில் உள்ள  சில கடைசி விவேகமான தலைவர்கள் அகற்றப்பட்டதுடன், ஷீ ஜின்பிங் தனது சர்வாதிகார ஆட்சியை இறுக்கிக்கொண்டு, ஆமாம் போடுபவர்களை மட்டுமே தன்னைச் சூழ வைத்துக் கொண்டமையால், சீனாவுடனான அதன் உறவுகளை மீண்டும் அளவீடு செய்வதற்கு ஜேர்மனியைத் தள்ளியுள்ளார்.

ஜேர்மனியின் முதல் சீன மூலோபாய ஆவணத்தை அடுத்த ஆண்டு தயாரிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச உறவுகளில் வன்முறையை தடை செய்ய வேண்டும் என்று தாய்வான் குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போது, ​​ஜேர்மனிய சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறியதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் தெரிவித்துள்ளது.

டிசெம்பரில் பதவியேற்ற மும்முனை கூட்டணி அரசாங்கம், ஜேர்மனியின் முதல் சீன மூலோபாய ஆவணத்தை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது. 

மூன்று கூட்டணிகளில், சீனாவுடன் அமெரிக்க பாணி பனிப்போரைத் தூண்டுவதைத் தவிர்க்க விரும்பும் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் சமூக ஜனநாயகவாதிகளை விட பசுமைவாதிகள் மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சியினர் மோசமானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

தாய்வான் பற்றிய அவரது கருத்துக்கள் மூலம், ஜேர்மனியின் மிக முக்கியமான வர்த்தக பங்காளி சீனா என்ற உண்மையின் பின்னணியை பார்க்க வேண்டும். இருப்பினும், சீனாவைச் சார்ந்து இருக்கும் வர்த்தகத்தை குறைக்க ஜேர்மனி தலைமை தீர்மானித்துள்ளது.

தாய்வானை மீட்பதற்கான சீன முயற்சிகளுக்கு எதிராக பேர்லின் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்தால், இது பொருளாதார அடிப்படையில் எல்லாவற்றிற்கும் மேலாக கடுமையான மோதலை ஏற்படுத்தும் என்றும் தற்போது, ​​இது சீன மூலப்பொருட்களான, மின்கலங்கள் மற்றும் குறைக்கடத்திகளை சார்ந்து உள்ளது எனவும் எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சீனாவுடன் ஒரு புதிய வர்த்தகக் கொள்கையில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஜேர்மனியின் பொருளாதார அமைச்சரும் துணை சான்ஸ்லருமான ரொபர்ட் ஹேபெக் கூறினார்.
 
பேர்லினில் இருந்து கிடைக்கும் அறிக்கைகளுக்கு அமைய, தொழிற்றுறை உளவு, நியாயமற்ற போட்டி அல்லது மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, ஜேர்மனியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகள் சீனாவை பொருளாதார ரீதியாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று பரவலாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்களின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, ஜேர்மனி இராணுவ ரீதியாகவும் சீனாவுக்கு எதிரான பாதுகாப்பை உயர்த்தியுள்ளது. 

தாய்வான் பிரச்சினையில் சீனாவை அழுத்துவதற்கு வொஷிங்டன் தலைமையிலான கூட்டு முயற்சியாகக் கருதப்படும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் 15 நாடுகளை உள்ளடக்கிய ஓர் இராணுவ ஒத்திகையான எக்சர்சைஸ் பிட்ச் பிளக் 2022இல் சேர்வதற்காக ஜேர்மனி 13 இராணுவ விமானங்களை அனுப்பியது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X