Editorial / 2024 மார்ச் 19 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் ஆகும்.
எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை காணப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் வெளியிட்டனர்.
உஷ்ணத்தை தணிப்பதற்காகவும், இதமான காற்று வாங்குவதற்காகவும் பொதுமக்கள் நீர் நிலைகள் அருகேயும் கடற்கரைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஐபனிமா மற்றும் கோபகபனா கடற்கரைகள் மக்களால் நிரம்பி வழிகின்றன.
மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், குடியிருப்புகளுக்காக காடுகளை அழிப்பது தொடர்வதாலும் வெப்ப அலையானது இன்னும் மோசமாகும் என காலநிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
14 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago