2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சுற்றுலா பஸ் விபத்து:13 பேர் பலி; 30 பேர் படுகாயம்

Freelancer   / 2025 ஜனவரி 05 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில், சனிக்கிழமை (4), சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்தனர்.

 இந்த பஸ்ஸில், 30க்கும் அதிகமானோர் பயணித்தனர்.

அந்தப் பஸ், வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X