2025 நவம்பர் 05, புதன்கிழமை

’சூடான் பழங்குடியின மோதல்களில் கிழக்கில் 37 பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானின் கிழக்கிலுள்ள சூடானின் பழங்குடியினங்களுக்கிடையேயான மோதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் சூடானிய ஆர்ப்பாட்ட முன்னணியுடன் தொடர்புடைய வைத்தியர்கள் நேற்று  தெரிவித்துள்ளனர்.

செங்கடல் மாநிலத்தின் தலைநகரும், சூடானின் பிரதான துறைமுகநகரான போர்ட் சூடானில், பனி அமெர் மற்றும் நுபா பழங்குடியினங்களுக்கிடையே கடந்த வாரம் வன்முறை வெடித்திருந்தது.

இந்நிலையில், எதனால் மோதல் ஏற்பட்டதென தெளிவில்லாமலுள்ளது.

இச்சந்தர்ப்பத்திலேயே 37 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள வைத்தியர்கள் செயற்குழு, போர்ட் சூடானிலுள்ள மூன்று வைத்தியசாலைகளிலுள்ள பாதிக்கப்பட்டோரை நிரற்படுத்தியுள்ளது.

ஒரு வைத்தியசாலையானது 34 பேர் இறந்ததாகவும் மொத்தமாக 126 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்த நிலையில், மற்றைய இரண்டு வைத்தியசாலைகளும் மூன்று பேர் இறந்ததையும், 75 பேர் காயமடைந்ததாகவும் பதிவுசெய்துள்ளதாகவும் வைத்தியர்கள் செயற்குழு கூறியுள்ளது.

16 பேர் உயிரிழந்திருந்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்த சூடானியப் பொலிஸார், மோதலைக் கட்டுப்படுத்த படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X