2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சூட்கேஸில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் உடல்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 அவுஸ்திரேலியாவில்  இறந்துபோன விலங்குகளின் உடல்களை  சூட்கேசில் வைத்து பாதுகாத்து வரும்  வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘காலநிலை, வெப்பநிலை ஆகியவை உயிரிழந்த விலங்குகளின் உடல்களில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன? ‘ என்பதை ஆய்வு செய்யும் விதமாகவே இவ் ஆராய்ச்சி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு அவுஸ்திரேலியாவின் புதர் நிலங்களிலேயே இவ்  ஆய்வு நடைபெற்று வருவதாகவும் இங்கு சுமார் 70 பெட்டிகளில் இறந்துபோன பன்றிகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உடல் சிதைவடையும் போது நடைபெறும் படிநிலைகள் குறித்து தடயவியல் நிபுணர்கள் அறிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் எனவும் குறிப்பாக, குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் இது உதவி செய்யும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய முர்டோக் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் மூத்த விரிவுரையாளர் பாவ்லா மாக்னி,"ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான மனித உடல்கள் மறைவான இடங்களில் பதுக்கப்படுகின்றன. குற்றத்திலிருந்து தப்பிக்கவும், உடலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் சூட்கேஸ்கள்,பைகள், வீல் பின்ஸ், கார் டிரங்குகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்கள் ஆகியவற்றை குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளால் எளிதில் பிடிக்கப்படாமல் இருக்கவும் தற்காலிகமாக உடலை பாதுகாக்கவும் இதுபோன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, இதனுள் உடல்கள் எவ்வாறு சிதைவுறுகின்றன? என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.

இந்நிலையில் இவ் ஆய்வில்  திரட்டப்பட்ட தரவுகள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட தடயவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X