Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோரியன் சூறாவளியைத் தொடர்ந்து பஹாமாஸில் ஏறத்தாழ 2,500 மக்களைக் காணவில்லை என பஹாமாஸின் தேசிய அவசரநிலை முகாமைத்துவ முகவரகம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காணாமல் போல சிலர் கண்டுபிடிக்கப்படலாம் என பஹாமாஸின் தேசிய அவசரநிலை முகாமைத்துவ முகவரகத்தின் பேச்சாளர் கார்ல் ஸ்மித் கூறியுள்ளார்.
தற்போதையை நிலையில் பஹாமாஸ் அரசாங்கத்தின் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஏறத்தாழ 2,500 தனிநபர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ள கார்ல் ஸ்மித், குறித்த பட்டியலை புகலிடங்களிலோ அல்லது வெளியேற்றப்பட்டவர்களின் அரசாங்கப் பதிவுகளுக்கெதிராக சோதனை செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அபாக்கோ, கிரான்ட் பஹாமாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சில தனிநபர்கள், சமூக சேவைகளுடன் இன்னும் பதிவுசெய்யப்படவில்லை என மேலும் கூறியுள்ள கார்ல் ஸ்மித், தங்களது தகவல் தொகுதிகளைச் சோதிக்கும்போது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கக் கூடியதாகவும், தப்பித்தவர்களை அவர்களின் உறவுகளுடன் சேர்க்கக்கூடியதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ அறிக்கைகளை மேற்கோள்காட்டி ஏறத்தாழ 76,000 மக்கள் டோரியானால் பாதிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், ஏறத்தாழ 860 பேர், பஹாமாஸின் தலைநகர் நஸ்ஸெளவிலுள்ள அவசரநிலை புகலிடங்களில் உள்ளனர்.
பிரிவு ஐந்து சூறாவளியாக வட பஹாமாஸைத் தாக்கிய டோரியன் சூறாவளியால் குறைந்தது 50 பேர் இறந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தோரின் இறுதி எண்ணிக்கை தொடர்பாக தாங்கள் கருத்துக் கூறப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள கார்ல் ஸ்மித், மக்களைப் போன்று தாங்கள் கவலைப்படுவதாகவும் டோரியனால் அழிவடைந்துள்ள வட பஹாமாஸ் தீவுகளான கிரான்ட் பஹாமா, அபாக்கோவிலிருந்து 5,500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
8 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
04 Nov 2025