2025 மே 16, வெள்ளிக்கிழமை

செயற்கைக் கால்கள் படைத்த சாதனை

Ilango Bharathy   / 2023 மே 22 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போரில் இரு கால்களை இழந்த முன்னாள் நேபாள இராணுவ வீரர் ஒருவர், செயற்கைக் கால்களுடன் எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

43 வயதான ஹரி புதாமகருக்கு முழங்காலுக்குக் கீழ் இரு கால்களும் கிடையாது. பிரித்தானியாவுக்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பங்கேற்றபோது, 2010- ஆம் ஆண்டில் தனது இரு கால்களையும் அவர் இழந்தார்.

இந்நிலையில் உடல் ரீதியான சவால்களால் துவண்டு போகாமல், விடாமுயற்சியுடன் செயற்கை கால்களின் துணையுடன் எவெரெஸ்டில் ஏறி ஹரி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .