Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 21 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் போரில் ரஷ்யாவின் போர் விமானம் தவறுதலாக தங்களது நகரிலேயே குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் போர் விமானம் Su-34 , உக்ரேனின் எல்லைப்புறத்தில் உள்ள பெல்கோரோட் நகரில் தவறுதலாக குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பிராந்திய ஆளுநர் கிளாகோவ் கூறும்போது, ”ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப் பகுதியில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன “ என்று தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்தி வருவதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago