Editorial / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, தமிழகம், தென்னிந்திய மாநிலங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்று, தெரிவிக்கப்படுகின்றது.
முக்கியமாக, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலேயே, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தின் கடற்கரையை ஒட்டிய கிராமப் புறப் பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், சென்னை கடற்கரைகளில், பாதுகாப்புப் படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதோடு, சந்தேகத்துக்குரிய மீன்பிடிப் படகுகளிலும் சோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் முக்கியமாக கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, விமான நிலையங்களுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளிடம், தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களிலும் மோப்பநாய்கள் மூலம் தொடர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago