Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் சிகாகோவில் இன்று (ஆகஸ்ட் 19) ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு துவங்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இதில், 50 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ., 5இல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், குடியரசு கட்சியினர் மில்வாக்கியில் தங்கள் மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று, சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு துவங்குகிறது. இதில், 4 ஆயிரம் பிரதிநிதிகள் உட்பட 50 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இதற்கிடையே, சர்ச்சை நாயகனான டிரம்ப் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றம், இனம் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருவதற்கு, கமலா ஹாரிஸ் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், இம்மாநாட்டில், ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா, பில் கிளிண்டன் மற்றும் கௌரவ சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
இது குறித்து ஜோ பைடனின் நெருங்கிய உதவியாளர் அஜய் பூடோரியா கூறுகையில், “முதல் கறுப்பின பெண்மணியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் வேட்பு மனுவை ஏற்க உள்ளார். நிறைய முக்கியமான விடயங்கள் நடக்க உள்ளன. இது நாட்டிற்கு ஒரு அழகான அற்புதமான தருணம். மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.S
24 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
2 hours ago