Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மார்ச் 13 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ஸ்பேஸ் ஒன்' நிறுவனம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான ரொக்கெட் தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டது.
இதற்கமைய, அரசின் ஒப்புதல் கிடைத்த நிலையில், ஜப்பானின் மேற்கு பகுதியிலுள்ள வகயாமா மாகாணத்தின் ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கைரோஸ் ரொக்கெட் இன்று (13) ஏவப்பட்டது.
அந்நாட்டு அரசின் சிறிய அளவிலான 18 மீட்டர் நீளமுள்ள ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளன.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் எரிந்த சில பாகங்கள் சுற்றியுள்ள மலை சரிவுகளில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செயற்கைக்கோளை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது என்ற ஜப்பான் தனியார் நிறுவனம் என்ற பெருமையை “ஸ்பேஸ் ஒன்” நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த தோல்வியானது, வருவாய் ஈட்டக்கூடிய வகையில் செயற்கைக்கோள் ஏவும் ஜப்பானின் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025