Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024ஆம் ஆண்டில் பட்ட வேதனைகள், சோகங்களை மறக்கும் வகையில் ஜப்பான் - ஒசாகாவில் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழும் திருவிழா நடைபெற்றது.
ஜப்பானில், லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா (வயது 67) உள்ளார்.
இந்த நிலையில், உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், 'சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள்' எனக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக யமகட்டா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024ஆம் ஆண்டில் பட்ட வேதனைகள், சோகங்களை மறக்கும் வகையில் ஜப்பான் - ஒசாகாவில் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழும் திருவிழா நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் வரை வாய்விட்டு சிரித்து மக்கள் தங்கள் கவலைகளை மறந்தனர். இதன்போது, சிரிப்பை குறிக்கும் வார்த்தை கொண்ட பதாகைகளை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago