Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தப் போவதாக, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் தெரிவித்துள்ளார். ஜமாலின் மரணம் தொடர்பாக, சவூதி அரேபியத் தரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையிலேயே, ஜனாதிபதி ஏர்டோவானின் இக்கருத்து வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ஏர்டோவான், “நீதியைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துமே, அப்பட்டமான உண்மையாக வெளிப்படுத்தப்படும். சாதாரணமான முறையிலன்றி, அப்பட்டமான உண்மையாக அது வெளிப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
துருக்கியின் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இன்று (23), உரையொன்றை, ஜனாதிபதி ஏர்டோவான் ஆற்றவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உரையின் போது அவர், தன் தரப்பு ஆதாரங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜமாலின் மரணம் தொடர்பாக, சவூதி மீது நேரடியான குற்றச்சாட்டு எதனையும், ஜனாதிபதி ஏர்டோவான், இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆனால், அவரது கருத்துகள், சவூதி மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவனவாக அமைந்துள்ளன.
அதேபோல், தனது நாட்டின், ஊடகவியலாளர்களையும் மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் அடக்கி ஒடுக்குபவராக அறியப்பட்ட ஜனாதிபதி ஏர்டோவான், இச்சம்பவம் மூலமாக, ஊடகவியலாளர்களுக்கு ஆதரவான நபராக, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
57 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago