Editorial / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியிலுள்ள சவூதித் தூதரகத்துக்குள் வைத்துக் காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் ஜமால் கஷோகி, தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என, துருக்கியைச் சேர்ந்த, அரசாங்கத்துக்கு ஆதரவான பத்திரிகையான யெனி சபாக் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணைகளைத் தொடர்ந்து, சித்திரவதை செய்யப்பட்ட ஜமால், அதன் பின்னர் கொல்லப்பட்டார் என்பதே, துருக்கியிலிருந்து வெளிவரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. ஜமால் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிப்பதற்கான ஒலிப்பதிவு, காணொளி ஆதாரங்கள் தம்மிடமுள்ளன என, துருக்கி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜமால் கொல்லப்பட்டதை உறுதிசெய்கின்ற ஒலிப்பதிவுகளைச் செவிமடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள யெனி சபாக், ஊடகவியலாளரின் விரல்கள் துண்டிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தது. இது தொடர்பாக, ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகளைச் செவிமடுத்ததாகக் குறிப்பிட்ட அப்பத்திரிகை, சித்திரவதையின் பின்னர், தலை துண்டித்து அவர் கொல்லப்பட்டார் என்று கொல்லப்பட்டார்.
குறித்த ஒலிப்பதிவுகளை யாரிடமிருந்து பெற்றதாகவோ அல்லது எவ்வாறு அவை கிடைத்தன என்பது தொடர்பிலோ, அப்பத்திரிகை தகவல் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், இவ்விடயம் தொடர்பாக, துருக்கியிலிருந்து வெளியாகும் தகவல்களை ஒத்ததாகவே, இத்தகவலும் அமைந்துள்ளது.
7 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
32 minute ago