2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜமால் கஷோகி கொலை: 5 பேருக்கு மரண தண்டனை

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சவூதி நீதிமன்றம்  5 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

சவுதி மன்னர், சல்மானின்  ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி.  

இவர் கடந்த வருடம் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற நிலையில், திடீரென தலைமறைவானதாக கூறப்பட்டது.

கஷோகியை சவூதி அரசு அதிகாரிகள், அந்த தூதரகத்துக்குள்ளேயே வைத்து கொலை செய்யப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது. 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஊடகவியலாளர் ஜமால் கஷோகி, சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில், சவுதி அரசாங்கத்தின் முகவர்கள் தூதரகத்திற்குள் கஷோகியைக் கொன்றனர். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்து விட்டனர். இந்தப் படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, உலகுக்கு தெரியவந்தது. அவரது உடலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த கொலைக்கு சவுதி அரேபியா பொறுப்பேற்றுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்று வலியுறுத்திய துடன், இளவரசர் முகமதுவின் பங்கை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.

இந்த படுகொலையில் 11 பேர் மீது சவுதி அரேபியா குற்றம்சாட்டி விசாரணைக்கு உட்படுத்தி வந்தது. 

இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு சவுதி நீதிமன்றம்  மரண தண்டனை விதித்து உள்ளதுடன், மேலும் மூன்று பேருக்கு 24 ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .