2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

டிஜிட்டல் கடவுச்சீட்டு அறிமுகம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் கடவுச்சீட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ் பொலிஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆப்ரேட்டருடன் இணைந்து டிஜிட்டல் கடவுச்சீட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது.

டிஜிட்டல் கடவுச்சீட்டு என்பது மொபைல் செயலியை அடிப்படையாக கொண்டது. இது, பயணிகள் தங்கள் கடவுச்சீட்டு தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.

இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டுத் திட்டம் சோதனை அடிப்படையில் பெப்ரவரி 2024 வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X