Mithuna / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள உணவகம் ஒன்றில் மார்க் என்பவர் இரவு சாப்பாடு சாப்பிட சென்றுள்ளார். உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்துள்ளார்.
சாப்பிட்டு முடித்த உடன் பெரும்தொகையை டிப்ஸ் ஆக வழங்க முடிவு செய்துள்ளார். சாப்பிட்டு முடித்தபின், ஊழியர் பில் கொடுத்துள்ளார். அதில் டிப்ஸ் ஆக ஒரு பெரும்தொகையை குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெரும்தொகை ஊழியர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. அந்த நபர் 32.43 அமெரிக்க டாலர் மதிப்புக்கு (இலங்கை மதிப்பில் 10,150 ரூபாய்) சாப்பிட்டுள்ளார். ஆனால் டிப்ஸாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 3,124,310 ரூபாய்) வழங்கியுள்ளார்.

வழக்கமாக 15 முதல் 25 சதவீதம் வரை டிப்ஸ் பெறுவோம். ஆனால், இந்த நன்றியுணவர்வுக்கு அளவே இல்லை என ஊழியர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ரெஸ்டாரன்ட் உரிமையாளர், அப்போது வேலையில் இருந்த 9 பேருக்கு அந்த தொகையை பிரித்து கொடுத்துள்ளார்.
இதற்கிடையே டிப்ஸ் கொடுத்த மார்க் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் இந்த டிப்ஸ் வழங்கிய பில்லை போஸ்ட் செய்து "நான் அழுகிறேன், நீ அழுகிறாய், நாம் அனைவரும் அழுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இவ்வளவு தொகையை டிப்ஸ் கொடுப்பதாக எழுதியுள்ளீர்கள். தவறாக எழுதி விட்டீர்களா?” என ரெஸ்டாரன்ட் மானேஜர் மார்க்கிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் “இல்லை. நான் தெரிந்துதான் எழுதியுள்ளேன். எனது நண்பர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு இந்த நகரில்தான் நடந்தது. இது அவரது நினைவாக” என்று தெரிவித்துள்ளார்.
8 minute ago
17 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
27 minute ago
2 hours ago