Freelancer / 2024 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி கொடுப்பேன்' என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரும் உலகின் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க், டிரம்பை ஆதரிப்பதாகவும், அவருக்கு 4.5 கோடி டொலர் தேர்தல் நிதி கொடுப்பதாகவும் அறிவித்தார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 இலட்சம் பேர் கேட்டனர். முன்னாள் ஜனாதிபதி டிரம்பை கைதூக்கி விடுவதற்கான அனைத்து வேலைகளையும் எலான் மஸ்க் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, டிரம்ப் ஜனாதிபதியானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருப்பதற்காக, அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய டிரம்ப், 'ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு நேர்காணல் நடத்தி டிரம்ப் மனதில் மஸ்க் இடம்பிடித்து விட்டார். அவருக்கு வீட்டு வாசல் தேடி அமைச்சர் பதவி வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.S
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago