Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 21 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்றும், அடுத்த வாரம் முதல் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஜனாதிபதி பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனிடையே நேரடி விவாதத்தில் செயல்பட்ட விதம் மற்றும் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் ஜனாதிபதி பைடன் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘டிரம்பின் பேச்சு எதிர்காலம் பற்றிய இருண்ட பார்வையாகும். இதற்கு பதிலடியாக நாம் அனைவரும் ஒரு கட்சியாக, நாடாக ஒன்றிணைந்து அவரை தேர்தலில் தோற்கடிப்போம். அடுத்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் பங்கேற்று டொனால்ட் டிரம்பின் 2025 கொள்கையின் அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.S
17 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
41 minute ago