2025 மே 05, திங்கட்கிழமை

டிரம்ப்பை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்

Freelancer   / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'டிரம்ப் புனித பூமியை அரசியல் ஆக்குகிறார். அவர் செயல் எல்லாமே ஒரு அரசியல் ஸ்டண்ட் தான்' என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், மற்றொரு வேட்பாளரான டிரம்ப்பை கடுமையாக சாடினார்.

போரில் உயிர் நீத்த வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அங்கு தேர்தல் பிரசாரம் செய்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறுகையில், “வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம், புனித பூமி. அங்கு எந்தவிதமான அரசியல் செயல்பாடுகளும் கூடாது என்று தடை உள்ளது. அப்படி இருந்தும் டிரம்ப் வேண்டும் என்றே அரசியல் செய்கிறார். இவர் தனது சுயநலத்திற்கு எதையும் செய்யக்கூடியவர்.

அமெரிக்க வீரர்களை கௌரவிக்க நாங்கள் ஒன்று கூடும் ஒரு புனிதமான இடம், ஆர்லிங்டன் கல்லறை. அது அரசியலுக்கான இடம் அல்ல. மயானம் என்பது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கான இடம் அல்ல. எங்கள் வீரர்கள், இராணுவ குடும்பங்கள் கௌரவிக்கப்பட வேண்டும். ஒருபோது இழிவுபடுத்தப்படக் கூடாது” என அவர் தெரிவித்தார்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X