Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 31 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்துக் கோவிலில் 16 வெவ்வேறு தெய்வங்கள் உள்ளதாகவும் பல நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துவதற்கான ஒரு சமூக மையம் மற்றும் வெளிக்கள நிகழ்ச்சித் தளம் ஆகியவை இன்னும் திறக்கப்படவில்லை என்றும் கோவிலின் அறங்காவலர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், புதிய இந்துக் கோவிலைத் திறந்துவைத்த பின்னர், ஜெபல் அலி பகுதியில் இந்துக் கோவில் வேண்டும் என்ற இந்தியர்களின் தசாப்த கால கனவு நிறைவேறியது.
“இந்து கோவிலின் அதிகாரபூர்வ திறப்பு விழா இன்று. டுபாயில், நாங்கள் இப்போது வழிபாட்டு கிராமத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம்” என்று இந்து கோவிலின் அறங்காவலர் ராஜு ஷெராஃப் தெரிவித்தார்.
மக்களை ஒன்று திரட்டி அவர்கள் வீட்டில் இருப்பதை உணர வைப்பதே வழிபாட்டு கிராமத்தில் உள்ள சமூக மையத்தின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.
தசரா பண்டிகைக்கு முன்னதாக இந்த கோவில் திறக்கப்பட்டதுடன், இது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றான சிந்தி குரு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவில், அனைத்து மதத்தினரையும் வரவேற்பதாகவும் 16 தெய்வங்கள் மற்றும் பிற உட்புற வேலைகளைக் காண வழிபாட்டாளர்கள் மற்றும் ஏனைய பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கல்ப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் வகையில், செப்டம்பர் 1 ஆம் திகதியன்று கோவில் திறக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்ட கோவிலின் உட்புறங்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
அலங்கரிக்கப்பட்ட தூண்கள், அரபு மற்றும் இந்து வடிவியல் வடிவமைப்புகள் கொண்ட முகப்பு என்பன காணப்படுவதுடன், கூரையில் மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
டுபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று அதிகாரபூர்வ கோவில் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கோவில் இணையதளம் வழியாக கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை அதன் திறப்பு விழாவில் செயற்படுத்தப்பட்டது.
மேலும், டுபாயில் உள்ள கோவிலில் நாளாந்தம் சுமார் 1,000 முதல் 1,200 பக்கதர்களில் வழிபாடுகளில் ஈடுபடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல தேவாலயங்கள் மற்றும் குருநானக் தர்பார் குருத்வாரா ஆகியவற்றைக் கொண்ட ஜெபல் அலியில் உள்ள 'வழிபாட்டு கிராமம்' என விவரிக்கப்படும் இடத்தில் கோவில் அமைந்துள்ளதுடன், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் இந்த கோவிலில் ஓகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago