Freelancer / 2024 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

‘டெலிகிராம்’ சமூக வலைதளத்தின் நிறுவனர் பாவல் துரோவ், பாரிசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாவல் துரோவ் என்பவர் நிறுவினார். இவர், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.
டெலிகிராம் ஆப்பை மேம்படுத்தாமல் பணமோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள், ஆபாச மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட உடந்தையாக இருந்தது போன்ற புகார்களினால் பிரான்ஸ் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், அஸர்பைஜானில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் போது பாரிஸ் அருகே உள்ள பொர்காட் விமான நிலையத்தில் வைத்து பாவல் துரோவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆனால் அவரது கைது விவரம் குறித்து பிரான்ஸ் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ரஷ்யா, உக்ரைன் போரின் போது அதிகாரப்பூர்வமற்ற, இருநாடுகளின் மோதல் பற்றியும், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தவறான செய்திகளை வெளியிடும் முக்கிய மையமாக டெலிகிராம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.S
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago