2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

டைகர் டவரில் தீ பரவல்: 3,800 பேர் மீட்பு

Janu   / 2025 ஜூன் 15 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெரினா நகரில் உள்ள டைகர் டவர் என்றும் அழைக்கப்படும் 67 மாடி கட்டிடத்தில் பெரும் தீ பரவல் ஏற்பட்டதாக துபாய் ஊடக அலுவலகம் (DMO)  தெரிவித்துள்ளது.

குறித்த தீ பரவல் வெள்ளிக்கிழமை (13)  இரவு ஏற்பட்டுள்ளதுடன் அதில் தங்கியிருந்த 3,820 குடியிருப்பாளர்கள் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

துபாய் சிவில் பாதுகாப்பு குழுவினர் ஆறு மணி நேரம் அயராது உழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கட்டிடத்தில் ஏற்கனவே 2015 ஆண்டு மே மாதம், 47 வது மாடியில் சமையலறையில் ஏற்பட்ட  தீ விபத்து  48 வது மாடி வரை பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X