2025 மே 05, திங்கட்கிழமை

டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டார்

Freelancer   / 2024 ஜூலை 16 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார்.

அதன்படி, செனட்டர் ஜே.டி.வான்ஸ் அவரது போட்டித் துணையாக முன்மொழியப்பட்டுள்ளார்.

அண்மையில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட தேர்தல் பேரணியின் பின்னணியில் குடியரசு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் உளவுத்துறையின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேக நபர் 20 வயதான தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X