2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ட்ரம்ப்பின் குறிப்புத் தாள்களும் அதன் இரகசியமும்

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதியுடன் தான் நடத்திய ஊடகச் சந்திப்புத் தொடர்பில் ஏற்பட்ட விமர்சனங்களைச் சந்திப்பதற்காக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடத்திய சந்திப்பிலும், சர்ச்சைகளுக்குக் குறைவிருக்கவில்லை.

பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக, இரண்டு தாள்களில், கதைக்க வேண்டிய விடயங்களை, தட்டச்சிக் கொண்டு வந்திருந்தார்.

ஆனால், அந்தத் தாள்களில் அவர், “அங்கு இணைந்து செயற்படுதல் இடம்பெற்றிருக்கவில்லை” என்று, பேனையால் எழுதியிருந்தார். அதிலும், எழுத்துப் பிழை காணப்பட்டது.

அதேபோன்று, “இந்தத் தலையீட்டில் சம்பந்தப்பட்ட எவராக இருந்தாலும், நீதிக்கு முன்னால் கொண்டுவரப்படுவர்” எனத் தட்டச்சப்பட்டிருந்த சொற்களை, பேனையால் அவர் குறுக்குக் கோடு மூலமாக, அகற்றியிருந்தார்.

ஏற்கெனவே, மிகப்பெரும் துப்பாக்கிச் சூடு காரணமாக, தமது நண்பர்களை இழந்த புளோரிடா மாணவர்களைச் சந்திக்கும் போதும், “நான் உங்களைச் செவிமடுக்கிறேன்” என, ஜனாதிபதி ட்ரம்ப் தட்டச்சி வைத்திருந்தமை, அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.

இம்முறை, தலையீட்டில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன்னால் கொண்டுவரவுள்ளதாகக் காணப்பட்ட வசனத்தை, அவர் நீக்கியுள்ளமை, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X