Editorial / 2018 மே 28 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரியத் தீபகற்பத்தில் முழுமையாக அணுவாயுதமழிப்பை மேற்கொள்ளவும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளவும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உறுதியாக உள்ளாரென, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் நேற்று (27) தெரிவித்தார்.
சிங்கப்பூரில் எதிர்வரும் 12ஆம் திகதி நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள இச்சந்திப்பு இடம்பெறாது என, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த பின்னர், ஐ.அமெரிக்காவும் வடகொரியாவும், மீண்டும் சந்திப்பு இடம்பெறுமென, தமது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன.
முன்னறிவித்தல்கள் எவையுமின்றி, வடகொரியத் தலைவரும் தென்கொரிய ஜனாதிபதியும், நேற்று முன்தினம் சந்தித்ததைத் தொடர்ந்தே, வடகொரியத் தலைவர் தெரிவித்ததாகக் கூறப்படும் இக்கருத்தை, தென்கொரிய ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
“ஜூன் 12ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பு வெற்றிகரமான இடம்பெற வேண்டுமென, தலைவர் கிம்மும் நானும் சம்மதித்துள்ளார். கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதமழிப்பு, அமைதியான ஆட்சி ஆகியனவற்றுக்கான எமது எதிர்பார்ப்பு இல்லாமல் போகாது” என, தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏற்கெனவே, இச்சந்திப்பு இடம்பெறாது என அறிவித்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், அதன் பின்னர், அச்சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025