2026 மே 09, சனிக்கிழமை

தடுப்பூசி செலுத்தியிருந்தால் பரிசோதனை தேவையில்லை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனாப்  பரிசோதனை செய்யத்  தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 பிரான்ஸில் அண்மைக்காலமாக  கொரோனாத் தொற்றுப் பரவலானது குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து அந்நாட்டில்,  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ”பிரான்ஸிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் போதுமானது. மேலும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டாம் என்றும், தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் போதும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .