S.Renuka / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் லூசியானா மாநிலத்திலுள்ள உள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது சொந்தக் குழந்தைகள் 8 பேரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது.
பொலிஸாரின் முதற்கட்டத் தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்த தனது 8 குழந்தைகளையும் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, 8 குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் வெவ்வேறு வயதுடையவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் சிறார்கள் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த தந்தை, சம்பவ இடத்திலேயே தன்னைத் தானே சுட்டுக் கொண்டாரா? அல்லது தப்பியோடி விட்டாரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் அண்டை வீட்டாரின் சாட்சியங்கள் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026