2025 மே 12, திங்கட்கிழமை

தனிநாடு கேட்கிறது பலுசிஸ்தான்

Editorial   / 2025 மே 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாண​மாக பலுசிஸ்​தான் உள்​ளது. ஆனால், பாகிஸ்​தான் அரசு தங்​களை புறக்​கணிப்​ப​தாக​வும், பலூச் பகு​தியை தனி நாடாக அறிவிக்க கோரி​யும் அங்​குள்ள பலூச் விடு​தலைப் படை​யினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். இந்​தியா - பாகிஸ்​தான் இடையே மோதல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், பலூச் மக்​களும் தங்​கள் பங்​குக்கு பாகிஸ்​தானுக்கு எதி​ராக அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். சமீபத்​தில் 12 பாகிஸ்​தான் ராணுவத்​தினர் சென்ற வாக​னத்தை வெடி வைத்து தகர்த்​தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்​டாவை கைப்​பற்றி விட்​ட​தாக​வும் பலூச் விடு​தலைப் படை அமைப்​பினர் அறி​வித்​து​விட்​டனர்.

அங்​குள்ள பிரபல எழுத்​தாளர் மிர் யார் பலூச்   கூறும்​போது, ‘‘பாகிஸ்​தானில் இருந்து பலுசிஸ்​தான் தனி நாடாகி விட்​டது. இதற்​கான அறி​விப்பு விரை​வில் வரும். புதிய அரசிடம் நிர்​வாகம் ஒப்​படைக்​கப்​படும். எனவே, டெல்​லி​யில் பலுசிஸ்​தான் தூதரகத்தை தொடங்க அனு​ம​திக்க வேண்​டும். ஐ.நா. பலுசிஸ்​தானுக்கு அமைதி படையை அனுப்ப வேண்​டும். தனி நாடாக பலுசிஸ்​தானை அங்​கீகரிக்க வேண்​டும்’’ என்று பகிரங்​க​மாகவே கூறி​யுள்​ளார்.

பாகிஸ்​தான் முஸ்​லிம் நாடாக இருந்​தா​லும், அதன் பலூசிஸ்​தானில் இந்​துக்​களும் சிறு​பான்​மை​யின​ராக இருக்​கின்​றனர். பாகிஸ்​தான் மக்​கள் தொகை​யில் 6 சதவீதம் மக்​கள் பலூச் பகு​தி​யில் உள்​ளனர். ஆனால், நிலப்​பரப்பு மட்​டும் 45 சதவீதம். அந்​தளவுக்கு மிகப்​பெரிய மாகாணம். தனிமங்​கள் கொட்​டிக் கிடக்​கும் இடம். இந்​துக்​களுக்கு பலுசிஸ்​தானுக்​கும் உள்ள தொடர்பை இங்​குள்ள ஹிங்​குலாஜ் அம்​மன் கோயில்​தான் உறுதி செய்​கிறது. இந்​தி​யா​வின் 54 சக்தி பீடங்​களில் ஹிங்​குலாஜ் கோயிலும் ஒன்​று.

ஹிங்​குலி என்​ப​தற்கு சிந்தி மொழி​யில் முன் நெற்றி பொட்டு அல்​லது குங்​குமம் என்று அர்த்​தம். பாகிஸ்​தானுக்கு எதி​ரான தாக்​குதலுக்கு ‘சிந்​தூர்’ என்று பிரதமர் மோடி பெயர் வைத்​துள்​ளது மிகப் பொருத்​த​மாக இருப்​பதை அறிய முடி​யும். இங்​குள்ள அம்​மனுக்கு செந்​தூரத்​தில்​தான் அலங்​காரம் செய்​கின்​றனர். இந்த கோயிலும் குகை​யில்​தான் அமைந்​துள்​ளது. பலுசிஸ்​தானின் லயரி தாசில் மலைப் பகு​தி​யில் கோயில் அமைந்​துள்​ளது. இயற்கை எழில் கொஞ்​சும் அந்த மலைப் பகு​தி​யில் உள்ள கோயிலுக்கு இந்​துக்​கள் ஆண்​டு​தோறும் புனித யாத்​திரை​யும் மேற்​கொள்​கின்​றனர். ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் ஒரு லட்​சம் இந்​துக்​கள் இந்​தக் கோயிலுக்கு புனித யாத்​திரை மேற்​கொள்​கின்​றனர். இந்த கோயிலை ஹிங்​லாஜ் தேவி, ஹிங்​குலா தேவி மற்​றும் நானி மந்​திர் கோயில் என்று மக்​கள் அழைக்​கின்​றனர்.

பாகிஸ்​தான் அரசின் புறக்​கணிப்​பு, சீனா​வின் கட்​டு​மானப் பணி​களால் பாதிப்பு போன்​றவற்​றால் விரக்​தி​யில் உள்ள பலுசிஸ்​தான் மக்​கள், தங்​களை தனி நாடாக அறிவிக்க கோரி போ​ராடி வரு​கின்​றனர். இந்​தியா மீதும் இந்​திய மக்​கள் மீதும் பலூச் மக்​கள் வைத்​திருக்​கும் அந்த நம்​பிக்​கை நிறைவேறு​மா என்​ப​தற்​கு ​காலம்​ பதில்​ சொல்​லும்​.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X