2025 மே 08, வியாழக்கிழமை

தன்பாலின திருமணத்தை அங்கீகரித்தது தாய்லாந்து

Freelancer   / 2024 ஜூன் 19 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது தாய்லாந்து அரசு. இதன் மூலம் இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகிறது. நேற்றைய தினம் இந்த அறிவிப்பு வெளியானது.

இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர். இதன் பின்னணியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் 20 ஆண்டுகால உழைப்பு அடங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 120 நாட்களுக்குள் இது குறித்த தகவல் அந்த நாட்டின் அரசிதழில் முறைப்படி இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினர் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது வானவில் கொடியையும் காற்றில் பறக்கவிட்டு மகிழ்ந்த அவர்கள், இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் தாய்லாந்தின் பங்கினை உலக நாடுகளுக்கு சுட்டிக்காட்டும் என அந்த நாட்டைச் சேர்ந்த தன்பாலின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலக அளவில் மிக பிரபலமாக உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக தாய்லாந்து நாட்டின் பல்வேறு இடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X