2025 நவம்பர் 05, புதன்கிழமை

தமிழ்நாடு ஆர்ப்பாட்டங்களையடுத்து இந்தி கட்டாயமாக்கும் சரத்து கைவிடப்பட்டது

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து, அனைத்து மாநிலங்களிலும் இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கும் தேசிய கல்விக் கொள்கை முன்மொழிவுக்கெதிராக அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த இந்திய மத்திய அரசாங்கம், சர்ச்சைக்குரிய சரத்தை விட்டு திருத்தப்பட்ட முன்மொழிவை வெளியிட்டுள்ளது.

மனிதவள முகாமைத்துவ அமைச்சால் இற்றைப்படுத்தப்பட்டுள்ள திருத்தப்பட்ட முன்மொழிவில், 4.5.9 பிரிவில் மொழிகளைத் தெரிவு செய்வதில் உள்ள நெகிழ்வுத் தன்மை திருத்தப்பட்டுள்ளது. எந்த மொழிகளை மாணவர்கள் தெரிவு செய்யலாம் என்ற எந்தவொரு பரிந்துரையும் தவிர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தி பேசும் மாநிலங்களிலுள்ள மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள நவீன மொழியொன்றைத் கற்க வேண்டுமென்றும், இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் பிராந்திய மொழி, இந்தி, ஆங்கிலத்தை கற்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை முன்மொழிவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரங்ஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள், நடிகர் கமல்ஹாஸனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அனைத்து தமிழ்நாடு எதிர்கட்சிகளும் மேற்குறித்த பரிந்துரையை விமர்சித்திருந்தன.

இதுதவிர, பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட தமிழ்நாட்டின் இரண்டு மொழிக் கொள்கையை மாற்றமாட்டோம் என வலியிறுத்தியிருந்தது. குறித்த கொள்கையானது இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கவில்லை.

இதேவேளை, மகாராஷ்ரா, மேற்கு வங்க மாநிலங்களிலும் குறித்த முன்மொழிவுக்கெதிராக எதிர்ப்புகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், எந்தவொரு மொழியும் திணிக்கப்படாதென்றும், மாநிலங்களோடு கலந்துரையாடப்படாமல் முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படாது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ஆகியோர் நேற்று முன்தினம் உறுதியளித்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X