2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தரைவழித் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா நகரம் முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் ஏற்கனவே செயலில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ஒப்புதலை வழங்கியிருந்த நிலையிலேயே தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
இந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 60,000 மேலதிகப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X