2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தர்ப்பூசணிப் பழத்தைக் கொடுத்து வீடு வாங்கலாம்

Ilango Bharathy   / 2022 ஜூலை 07 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் இயங்கிவரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சமீப ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று,உள்ளூர் விவசாயிகளை ஈர்க்கும் வகையில்  தர்பூசணி பழங்களை முன்பணமாக கொடுத்து வீடுகளை பதிவு செய்யலாம்  என அறிவித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சீனாவில் ஒரு கிலோகிராம்  தர்ப்பூசணி பழம் 20 யுவான்களுக்கு விற்கப்படுகின்றன. ஆகவே அதிகபட்சமாக 5000 கிலோகிராம்  தர்ப்பூசணிப்  பழங்களை கொடுத்து (அதன் மதிப்பான 100,000 யுவான்கள்) வீட்டினை முன்பதிவு செய்யலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ் அறிவிப்பானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .