Editorial / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய பாரிய தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தற்போது உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
மாலியின் தற்போதைய இராணுவ அரசாங்கத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் சாடியோ காமாரா, நேற்று முன்தினம் தலைநகர் பமாக்கோவிற்கு அருகிலுள்ள 'கதி' (Kati) பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று அமைச்சரின் வீட்டின் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. இக்கோரத் தாக்குதலில் அமைச்சர், அவரது இரண்டாவது மனைவி மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது அமைச்சரை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மாறாக தலைநகர் பமாக்கோ விமான நிலையம், மோப்தி, சேவாரே மற்றும் காவ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட பெரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும் எனத் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல்களை அல்கொய்தாவுடன் தொடர்புடைய 'JNIM' அமைப்பும், துவாரெக் கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பான 'அசாவாத் விடுதலை முன்னணி' (FLA) அமைப்பும் இணைந்து மேற்கொண்டுள்ளன. கிளர்ச்சியாளர்களும் ஜிஹாதி அமைப்புகளும் இவ்வாறு முதல்முறையாக ஒருங்கிணைந்து செயல்படுவது பாதுகாப்பு ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல்களின் விளைவாக, வடக்கு மாலியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகராகக் கருதப்படும் 'கிடால்' (Kidal), மீண்டும் கிளர்ச்சியாளர்களின் வசமாகியுள்ளது. முன்னதாக, ரஷ்யாவின் 'ஆப்பிரிக்கா கார்ப்ஸ்' (முன்னாள் வாக்னர் குழு) அமைப்பின் உதவியுடன் மாலி இராணுவம் இந்நகரைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், தற்போது இந்நகரம் முழுமையாகக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதால் மாலி அரசாங்கம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
9 minute ago
18 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
29 minute ago