Freelancer / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் நிலவும் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து தலிபான் தலைமையுடன் பிரித்தானிய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோசமான மனிதாபிமான சூழ்நிலையைப் பற்றி கலந்துரையாடியதுடன், பெண்கள், யுவதிகள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்களை நடத்துவது உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் தீவிர கரிசனைகளை அதிகாரிகள் தலிபான்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலினால் 700,000க்கும் அதிகமான ஆப்கானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
அவர்கள், கடந்த ஆண்டுகளில் ஏற்கெனவே இடம்பெயர்ந்த 5.5 மில்லியன் மக்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியானது மனிதாபிமான தேவைகளை தீவிரப்படுத்துவதுடன், நாட்டுக்குள்ளேயும், எல்லைகள் தாண்டிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடப்பெயர்ச்சி அபாயங்களை அதிகரிக்கிறது என, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் உகோச்சி டேனியல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானியர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் யுவதிகள், அதிகளவான பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் மேலும் தெரிவிக்கிறது.
52 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago
09 May 2026