2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தலிபான்களுடன் கைகோர்த்த ரஷ்யா

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில்  தலிபான்கள் ஆட்சி அமைந்த பின்னர்  அந்நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைக் கண்டு வருகின்றது.

இந்நிலையில் தலிபான்கள், ரஷ்யாவுடன் எரிபொருள் மற்றும் கோதுமையை தள்ளுபடியில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், கையெழுத்திட்ட மிகப் பெரிய ஒப்பந்தம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவ் ஒப்பந்தத்தின் படி  ஒரு மில்லியன் தொன்  பெட்ரோல் மற்றும் டீசல், அரை மில்லியன் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, இரண்டு மில்லியன் தொன் கோதுமை ஆகியவை ஆண்டுதோறும் ரஷ்யா வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மேலும் நீண்ட கால ஒப்பந்தங்களைச்  செய்ய தலிபான் அரசு ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X