Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட ஆப்கானிஸ்தானின் பர்யப் மாகாணத்தின் கோர்மச் மாவட்டத்திலுள்ள செனயீஹா இராணுவத் தளத்தில் பெரும்பாலான பகுதிகளை தலிபான் ஆயுததாரிகள் கடந்த இரண்டு நாட்களாகக் கைப்பற்றியதில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 10 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்ததுடன் டசின்கணக்கானோர் தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
பர்யப் மாகாண சபையின் தலைவர் மொஹமட் தஹ்ரிர் ரஹ்மனியின் தகவல்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த வலிந்த தாக்குதலொன்றில் குறித்த இராணுவத் தளத்திலுள்ள கவச வாகானங்கள், வெடிபொருட்களை தலிபான் ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த தளத்துக்குள் தங்களால் உட்புகமுடியாதுள்ளதாகவும் தளத்தின் பெரும்பாலான பகுதிகள் தலிபானின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுவதாக மொஹமட் தஹ்ரிர் ரஹ்மானி மேலும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மொஹமட் தஹ்ரிர் ரஹ்மானி வழங்கிய நிலையில், 40 படைவீரர்கள் தலிபானால் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் ஆனால் தாக்குதலில் 30 தலிபான் ஆயுததாரிகளும் கொல்லப்பட்டதாக பிறிதொரு மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு மாகாணமான கஸ்னியில் இடம்பெறும் மோதல்களுக்கு சமாந்தரமாகவே மேற்படி தாக்குதலையும் தலிபான் மேற்கொண்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago