2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தாக்குதல்களை நிறுத்துவதாக ஹூதிகள் அறிவிப்பு

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில் போரில் ஈடுபட்டுவரும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமனின் ஏனைய தோழமை நாடுகள் ஆகியவற்றின் மீதான ட்ரோன் தாக்குதல்களையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் இடைநிறுத்துவதாக, யேமனின் ஹூதி போராளிகள், நேற்று (19) அறிவித்தனர். ஐக்கிய நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்தே, இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யேமனில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போர் காரணமாக, அந்நாட்டில் பஞ்சம் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, இதுவரைக்கும் 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போர், ஹொடெய்டா துறைமுகத்துக்கு அண்மையாக மாறியுள்ள நிலையில், தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தப் போரை இடைநிறுத்துமாறு, ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளால் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஹொடெய்டா மீதான தாக்குதலை இடைநிறுத்துவதாக, சவூதி தலைமையிலான அரபுக் கூட்டணி அறிவித்தது.

இந்நிலையிலேயே, ஐ.நாவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தமது தாக்குதல்களை நிறுத்துவதாக, ஹூதி ஆயுததாரிகளும் அறிவித்தனர்.

யேமனுக்கான ஐ.நா விசேட தூதுவர் மார்ட்டின் கிரிஃப்த்ஸ், இரு தரப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்த முயன்று வருகிறார். இவ்வாண்டு செப்டெம்பரில் இவ்வாறான பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பேச்சுவார்த்தையில் ஹூதிகள் பங்குபற்றியிருக்காத நிலையில், அப்பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், இரு தரப்புகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்குச் சம்மதித்துள்ள நிலையில், இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை, முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X