2026 மே 09, சனிக்கிழமை

dd

தாய்க்கு இறுதியாக மகன் அனுப்பிய குறுஞ்செய்தி

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனில் யுத்தக்களத்தில் இருக்கும் ரஷ்ய இராணுவ வீரர், தனது தாய்க்கு அனுப்பிவைத்திருக்கும் குறுஞ்செய்தில் உருக்கமான தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். அவர் தற்போது உயிருடன் இல்லை. உக்ரேன் யுத்தத்தில் மரணித்துவிட்டார்.

  சம்மந்தப்பட்ட ரஷ்ய வீரரிடம், அவரின் தாய், "ஏன் நீண்டகாலமாக நீ குறுஞ்செய்தி அனுப்பவில்லை?. உனக்கு  ஏதேனும் பொதி அனுப்பவா?" என கேட்கிறார்.

இதற்கு பதிலளித்த அராணுவ வீரர், "நான் கிரிமியாவில் இல்லை. தற்போது நான் உக்ரேனில் இருக்கிறேன். இங்கு உண்மையான போர் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு பயமாக உள்ளது. நாங்கள் அனைத்து நகரங்களிலும் வெடிகுண்டு வீசி வருகிறோம். பொது மக்கள் இருக்கும் பகுதிகளில் கூட, குண்டு  வைத்து தகர்த்து வருகிறோம்.  

 ஆனால், அவர்கள் எங்களின் வாகனங்களின் கீழ் விழுந்து எங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். பாசிஸ்ட்டுகள் என்றும் எங்களை அழைக்கிறார்கள். இது மிகவும் கடினமாக உள்ளது அம்மா. இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என அந்த ராணுவ வீரர் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு, அந்த இளம் ராணுவ வீரர், போரில் உயிரிழக்கவும் செய்துள்ளார்.  

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .